பிரம்மா இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘குற்றம் கடிதல்’ படம், தமிழ் மொழிக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதை வாங்கி கோலிவுட்டிற்கு கௌரவம் சேர்த்தது. ஆசிரியை ஒருவருக்கும், அவரால் அடிபட்ட மாணவன் ஒருவனின் குடும்பத்திற்குமிடையே நடக்கும் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நடித்த அனைவருமே யதார்த்தமான நடிப்பை வழங்கி விமர்சகர்களிடத்தில் பாராட்டுக்களை அள்ளினர். குறிப்பாக கதையின் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்த ராதிகா பிரசிதா ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
‘குற்றம் கடிதல்’ படத்தைத் தொடர்ந்து ராதிகா பிரசிதா, இயக்குனர் விஜய் மில்டன் படத்தில் நடிக்கவிருக்கிறார். பரத், இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார் விஜய் மில்டன். இப்படத்தில் இரண்டு நாயகிகள். ஒரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, இன்னொரு நாயகி வேடத்திற்கு ராதிகா பிரசிதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. சென்னை, கடலூர், பாண்டிச்சேரி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய் மில்டன்.
‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில்...
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டு வருகிறோம். அந்த...
‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா-...