‘ரோமியோ ஜூலியட்’ டீமுடன் இணையும் அரவிந்த் சாமி?

‘ரோமியோ ஜூலியட்’ டீமுடன் இணையும் அரவிந்த் சாமி?

செய்திகள் 22-Feb-2016 11:01 AM IST Chandru கருத்துக்கள்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கியவர் லக்ஷ்மண். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியை நாயகனாக வைத்து புதிய படமொன்றை லக்ஷ்மண் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது அப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இந்த புதிய படத்திற்கு ‘போகன்’ என்ற டைட்டிலை வைக்க பரிசீலித்து வருகிறார்களாம். அதோடு, ‘ரோமியோ ஜூலியட்’டில் நாயகியாக நடித்த ஹன்சிகாவே இப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார். அதோடு ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவி ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ‘போகன்’ படத்திலும் ஜெயம் ரவி போலீஸாக நடிக்க, அர்விந்த் சாமியும் முக்கிய வேடமோன்றில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் ‘போகனி’ன் படப்பிடிப்பை சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;