கார்த்தி படித்த பள்ளியில் ‘தோழா’ ஆடியோ விழா!

கார்த்தி படித்த பள்ளியில் ‘தோழா’ ஆடியோ விழா!

செய்திகள் 22-Feb-2016 10:55 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘காஷ்மோரா’ படப்பிடிப்பு ஒரு பக்கம் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவர் நடித்துள்ள ‘தோழா’ பட ரிலீஸ் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘தோழா’வில் கார்த்தியுடன் நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக், சமீபத்தில் காலமான கல்பனா முதலானோர் நடித்திருக்க, வம்சி இயக்கியுள்ளார். கோபிசுந்தர் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள St. Bede's Anglo Indian Higher Secondary School வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. ‘தோழா’ விழா நடைபெறவிருக்கும் இந்த ஸ்கூல் கார்த்தி படித்த ஸ்கூல் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் ‘தோழா’வில் கார்த்தியுடன் நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொள்ளவிருப்பதோடு சிறப்பு விருந்தினராக சூர்யாவும் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆடியோ வெளியீட்டு விழாவை தொடர்ந்து ‘தோழா’ அடுத்த மாதம் (மார்ச்) இறுதியைல் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;