‘இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பிவிபி சினிமாஸ்’ தயாரித்துள்ள படம் ‘தோழா’. கார்த்தி, நாகார்ஜுனா என இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், விவேக், சமீபத்தில் காலமான நடிகை கல்பனா முதலானோரும் நடித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் ‘தோழா’வின் டீஸர் இன்று மாலையும், பாடல்கள் வருகிற 26-ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு ‘பிவிபி சினிமாஸ்’ தயரித்த ‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். டீஸர் மற்றும் பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து மார்ச் இறுதியில் தோழா வெளிவரவிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...