மிருதன் – விமர்சனம்

குறையிருந்தாலும் புதிய முயற்சியை வரவேற்போம்!

விமர்சனம் 19-Feb-2016 1:57 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Shakti Soundar Rajan
Production : Global Infotainment
Starring : Jayam Ravi, Lakshmi Menon
Music : D. Imman
Cinematography : S. Venkatesh
Editing : K. J. Venkat Ramanan

‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முதல் சோம்பி படம் என்ற அடையாளத்துடன் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த ‘மிருதன்’ தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்குமா?

கதைக்களம்

ஊட்டியில் டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ‘ஜெயம்’ ரவி தன் அனபு தங்கையுடன் (அனைகா) வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் டாக்டரான லட்சுமி மேனனை சந்திக்கும் ‘ஜெயம்’ ரவிக்கு அன்றிலிருந்து அவர் மீது காதல் . இந்நிலையில் ஊட்டியில் ஒரு தொழிற்சாலைக்கு கெமிக்கல் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியிலிருந்து கெமிக்கல் கீழே கொட்டி விடுகிறது. அந்த கெமிக்கலை ஒரு நாய் குடிக்க, அதனால் அந்த நாய் வெறிப் பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது. நாய் கடிபட்ட மனிதனுக்குள் அந்த வைரஸ் பரவ, அவர் ஒரு மனித மிருகமாக மாறி (சோம்பி) மற்ற மனிதர்களையும் கடிக்க துவங்க, ஊர் முழுக்க மனித மிருகங்கள் உருவாகிறது. இதனால் பேராபத்துக்கு உள்ளாகும் அந்த ஊரையும், மக்களையும் காப்பாற்ற ‘ஜெயம்’ ரவி, லட்சுமி மேனன் முதலானோர் மேற்கொள்ளும் போராட்டங்களே ‘மிருதன்’.

படம் பற்றிய அலசல்

ஹாலிவுட்டில் இதுபோன்ற பல படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும் அந்த படங்களோடு ஒப்பிடுகையில் இந்த மிருதனை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் அதில் ஓரளவுக்கே வெற்றிபெற்றுள்ளார். 106 நிமிடங்கள் ஓடும் படத்தில் முதல் அரை மணி நேரம் வரும் காட்சிகளிலுள்ள நேர்த்தி, அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது. கூட்டம் கூட்டமாக மனித மிருகங்கள் வருவது, கடித்து குதறுவது, அவர்களை சுட்டு தள்ளுவது என படம் முழுக்க ஒரே துப்பாக்கி சத்தமும், ரத்தம் சிந்துவதுமான வன்முறை காட்சிகள் தான்! இடைவேளைக்கு பிறகு வரும் இதுபோன்ற காட்சிகள் ஓவர் டோஸாக அமைந்து விட்டன. . ‘ஜெயம்’ ரவிக்கு லட்சுமி மேனன் மீதிருக்கும் மெல்லிய காதல், தங்கை சென்டிமென்ட், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர் முதலானோரின் காமெடி காட்சிகளை ரசிக்கும்படியாக படமாக்கிய இயக்குனர் சோம்பிகளுக்கான மேக்-அப், மற்றும் டெக்னிகல் விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தியிருப்பதை உணர முடிகிறது! அதைப் போல டி.இமானின் இசை, வெங்கடேஷின் ஒளிப்பதிவு, கே.ஜே.வெங்கட்ரமணனின் படத்தொகுப்பு ஆகிய டெகினிக்கல் விஷயங்களிலும் ‘மிருதன்’ தலை நிமிர்ந்து நிற்கிறான்! திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி, படத்தில் வரும் அதிகபடியான கோர காட்சிகளை குறைத்து இப்படத்தை இயக்கியிருந்தால் இது ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக அமைந்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஜெயம்’ ரவி அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மனித மிருகங்களிடமிருந்து தன்னையும், தன் தங்கை, காதலி ஆகியோரை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டங்கள் விறுவிறு, பரபர காட்சிகள்! அதிரடி ஆக்‌ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறார் ரவி! டாக்டராக வரும் லட்சுமி மேனன், அவரது காதலனாக வரும் அமித் பார்கவ், ‘ஜெயம்’ ரவியுடன் சக டிராஃபிக் போலீஸ்காரராக வரும் காளி வெங்கட், அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரது நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. எடுத்துக் கொண்ட புதிய கதைக்களம்
2. ‘ஜெயம்’ ரவி
3. சோம்பி மேக்-அப் உட்பட அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும்

பலவீனம்

1. கவனக் குறைவான இரண்டாம் பாதி திரைக்கதை
2. அதிகபடியான துப்பாக்கி சத்தங்கள், வன்முறை காட்சிகள்..

மொத்தத்தில்

தமிழ் சினிமாவுக்கு ‘மிருதன்’ புதிய கதைக்களம் என்பதால் ரசிகர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : குறையிருந்தாலும் புதிய முயற்சியை வரவேற்போம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;