3 மாறுபட்ட வேடங்களில் உதயா நடிக்கும் படம்!

3 மாறுபட்ட வேடங்களில் உதயா நடிக்கும் படம்!

செய்திகள் 19-Feb-2016 10:17 AM IST VRC கருத்துக்கள்

‘திருநெல்வேலி’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுவும், உதயாவும் இணைந்து நடிக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்த படத்தில் உதயா உடலை மெலிய வைத்தும், தாடி வைத்தும், மொட்டை அடித்தும் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். ‘ஸ்டார் விஷன்’ நிறுவனம் சார்பாக கணேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆஸிஃப் குரைஷி இயக்குகிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதோடு ஏராளமான விளம்பர படங்களை இயக்கவும் செய்துள்ளார். மூன்று கதாநாயகிகளை கொண்ட இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லர் கதையாம் இப்படம். இப்படத்திற்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த் பாலாஜி சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு அறிமுக இசை அமைப்பாளர் இசை அமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) 24ஆம் தேதி கோவையில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;