பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மிரட்டு’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்! இந்த படங்களுடன் கௌதம் மேனன் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது அந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்போதுமே தன் படங்களுக்கு தூய தமிழில் டைட்டில் வைக்கும் கௌதம் மேனன், தனுஷை வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தான் நடிக்கவிருப்பதை தனுஷ் ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்கிறார். இந்த படம் தவிர ‘ஜெயம்’ ரவி நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார் மதன். தற்போது தனுஷ் நடித்து வரும் கொடி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வின் படப்பிடிப்பு ஆர்மபமாகவுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...