ராம், சிங்கம் புலி வரிசையில் ‘போக்கிரிராஜா’

ராம், சிங்கம் புலி வரிசையில் ‘போக்கிரிராஜா’

செய்திகள் 18-Feb-2016 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் ‘போக்கிரி ராஜா’. ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகா முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஃபிப்ரவரி 14, காதலர் தினத்தன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது. ‘பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயரித்துள்ள இப்படத்தை முதலில் இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது படத்தை ஒரு வாரம் தள்ளி மார்ச் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ஏற்கெனவே ஜீவா நடித்த ‘ராம்’ மற்றும் ‘சிங்கம் புலி’ ஆகிய படங்கள் மார்ச் 4-ஆம் தேதி தான் வெளியாகின! இப்போது அதே தேதியில் (மார்ச்-4) ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’வையும் ரிலீஸ் செய்யவிருப்பதால் ஜீவாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;