ரஜினி, கமலை களத்தில் இறக்கும் விஷால்!

ரஜினி, கமலை களத்தில் இறக்கும் விஷால்!

செய்திகள் 18-Feb-2016 10:41 AM IST Chandru கருத்துக்கள்

விக்னேஷ் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘அவன் அவள்’. கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராக இருந்த ராம்கிரீஷ் மிரினாளி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உடபட பலர் கலந்துகொண்டனர். ஆடியோவை விஷால் வெளியிட, கார்த்தி பெற்றுக்கொண்டார். அதன் பிறகு விஷால் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,

‘‘நடிகர் சங்கத்திடம் 48 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தது. மேலும் 2 கோடி கடன் வாங்கி மொத்தம் ரூ 2 கோடி 48 லட்சம் செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம். தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட மொத்த திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் நடக்கின்றன். நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். அதற்கான தேதி கேட்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

புதிய நிர்வாகிகளால் நடிகர் சங்க வளாகம் மீட்டு எடுத்த பிறகு அந்த வளாகத்தில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி விக்‌னேஷின் ‘அவன் அவள்’ படப் பாடல் வெளியீட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;