ஏப்ரலில் ஸ்ருதியுடன் அமெரிக்கா பயணிக்கும் கமல்!

ஏப்ரலில் ஸ்ருதியுடன் அமெரிக்கா பயணிக்கும் கமல்!

செய்திகள் 18-Feb-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

2015ல் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என உலகநாயகனின் 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தற்போதும் தன் அடுத்தடுத்த படவேலைகளில் பிஸியாகிவிட்டார் கமல். மீண்டும் ‘தூங்காவனம்’ இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிப்பதோடு, மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் ‘அம்மா அப்பா விளையாட்டு’ என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம் ‘அம்மா நானா ஆட்ட’ என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக்கம் பெறுகிறது.

‘அம்மா அப்பா விளையாட்டு’ படத்திற்காக அப்பா கமலுடன் மகள் ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அமலா நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணனும் இடம்பெறுகிறார்கள். முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. முதல்கட்ட படப்பிடிப்பிற்காக ஸ்ருதியுடன் அமெரிக்கா பயணமாகிறார் கமல். அதனைத் தொடர்ந்து ஜார்ஜியா, நியூ யார்க் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள். கமலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான சனு வர்க்கீஸ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டக்கோழி 2 ட்ரைலர்


;