விக்னேஷ் நடிக்கும் த்ரில்லர் படம்!

விக்னேஷ் நடிக்கும் த்ரில்லர் படம்!

செய்திகள் 17-Feb-2016 11:56 AM IST VRC கருத்துக்கள்

‘காயன்ஸ் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரித்துள்ள படம் ‘அவன் அவள்’. இப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவா லட்சுமணன், செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி சீனிவாசன் கவனித்துள்ளார். விக்னேஷ் நடித்துள்ள த்ரில்லர் படம் ‘அவன் அவள்’.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ராம்கிரீஷ் மிரினாளி
படம் குறித்து பேசும்போது, ‘‘அவன் அவள்’ படத்தின் கதை இப்பொழுது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள் தான். கணவன், மனைவி எப்படி புரிதலுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும். அப்படி விட்டுக் கொடுக்காமல் ஒன்றை விட ஒன்றை ஒப்பிட்டு அது உன்னை விட சிறந்தது, இது உன்னை விட சிறந்தது என்று பேசி மனதை மாற்றி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். அப்படி வாழ்த்த ஒருவனின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை. இதனை த்ரில்லர் கலந்து உருவாக்கியுள்ளோம். விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக அமையும். அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்


;