ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் விருந்து!

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் விருந்து!

செய்திகள் 17-Feb-2016 10:54 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, ‘24 AM STUDIOS’ பட நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் அட்லியிடம் அசிஸ்டென்டாக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், இசைக்கு அனிருத், கலை இயக்கத்திற்கு முத்துராஜ், சவுன்ட் டிசைனுக்கு ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி என பெரும் கூட்டணி அமைத்துள்ளார்கள். ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் அவருக்கு ஜோடி! பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி டைட்டிலை அறிவிக்கவிருக்கிறார்கள். இந்த டைட்டில் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. ‘ரஜினி முருகன்’ பட வெற்றியுடன் இன்று பிறந்த நாள் காணும் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக தனது புதுப்பட டைட்டிலை அறிவிக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ரசிகர்கள் மற்றும் ஏராளமான திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீமராஜா டீஸர்


;