அருள்நிதி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருள்நிதி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 17-Feb-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

அருள்நிதி நடிப்பில் ‘ஈரம்’ பட புகழ் அறிவழகன் இயக்கியுள்ள படம் படம் ‘ஆறாது சினம்’. மலையாள ‘மெமரீஸ்’ த்ரில்லர் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களை விநியோகித்து வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் நேரடியாக தயாரித்துள்ள இப்படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று சென்சார் ஆனது. இப்படத்திற்கு சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படத்தை ரசிகர்களின் பார்வைக்கு வருகிற 26-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் இப்படக் குழுவினர். இதே நாளில் அதர்வா நடித்துள்ள ‘கணிதன்’, எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடித்துள்ள ‘நையப்புடை’ ஆகிய படங்களும் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;