நடிகைகளுக்கு ‘அபிராமி’ ராமநாதன் வேண்டுகோள்!

நடிகைகளுக்கு ‘அபிராமி’ ராமநாதன் வேண்டுகோள்!

செய்திகள் 16-Feb-2016 12:18 PM IST VRC கருத்துக்கள்

அயல்நாடு வாழ் இந்தியரும் ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவருமான கொட்டீஸ்வர ராஜுவும் அவரது மனைவி ஹேமா ராஜுவும் இணைந்து ‘ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆகம்’. இர்ஃபான், தீக்ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவரான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கதை எழுதி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘அபிராமி’ ராமநாதன், வி.ஜி.சந்தோஷம் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் ‘அபிராமி’ ராமநாதன் பேசும்போது,

‘‘என்னை பேச அழைக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார்.அது தப்பில்லை. ஏன் என்றால் நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன். ‘தியாக பூமி’ உள்ளிட்ட மாபெரும் படங்களை இயக்கிய கே.சுப்பிரமணியம் இயக்கிய - நேரு பற்றிய - ஒரு சிறு படம் அது! அப்போது எனக்கு வயது எட்டு. படத்தில் ஒரு காட்சியில் நேருவாக நடிப்பவரின் கையை நான் பிடித்துக் கொண்டு நடக்க, அடுத்து ஐந்து வயது சிறுமி, என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும். இந்தக் காட்சியைப் பார்த்த என் ஆத்தா (அம்மா), 'என்ன இவன்... இந்த வயசுலேயே பொம்பளப் புள்ள கையைப் பிடிச்சு கிட்டு நடக்குறான். இனிமே இவனை நடிக்க விடக் கூடாது'ன்னு சொல்லிட்டார். அப்புறம் நடிக்க விடவே இல்ல. என்னை மட்டும் என் ஆத்தா நடிக்க விட்டிருந்தாகி நான் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் போட்டியா வந்திருப்பேன்’’ என்றார்.; மேலும் அவர் பேசும்போது,

‘‘இப்படத்தில் பல புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா இந்தப் படம் நல்லா ஓடணும். அதற்கு பத்திரைகையாளர்கள் ஆதரவு தரணும்! இந்த நேரத்துல ஒன்றை சொல்ல விரும்பறேன். இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்கே பேசினாங்க. சினிமா விழாக்களுக்கு வர்ற பெரும்பாலான நடிகைகளும் ஆங்கிலத்திலேயே பேசுறாங்க. அது ஏன்? தமிழ் தெரியாதவங்க ஆங்கிலத்தில் பேசினா அது தப்பில்லை. ஆனால் தமிழ் தெரிந்த நடிகைகள் ஆங்கிலத்துல பேசுறாங்களே! அது ஏன்? நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற பொண்ணு எவ்வளவு அழகா சேலை கட்டி வந்திருக்கு! ஆனா தமிழ்ல பேசுறார். திரைப்பட விழாக்களுக்கு வரும் நடிகைகள் தமிழ்நாட்டு கலாசாரபடி கண்ணியமாக சேலை கட்டி வரவேண்டும், தமிழில் பேச வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்!

‘வந்தடைதல்’ என்று பொருள்படும்படியான ‘ஆகம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;