விஜய்யுடன் நடிப்பதை உறுதிசெய்த கீர்த்தி சுரேஷ்!

விஜய்யுடன் நடிப்பதை உறுதிசெய்த கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 16-Feb-2016 10:11 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ டீஸர் 80 லட்சம் பார்வையிடல்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அட்லி இயக்கத்தில் தான் நடிக்கும் இப்படத்தைத் தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய். இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதல்முறையாக விஜய்யுடன் இணைகிறார் சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சுகுமார் கவனிக்க, எடிட்டிங் செய்கிறார் பிரவீன் கே.எல். வரும் ஏப்ரல் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், விஜய்யின் 60வது படத்தில் தான் நடிக்கவிருப்பதை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறார். அதில் அவர், ‘‘ஆம்... விஜய் 60 படத்தின் மூலம் இளையதளபதி விஜய் சாருடன் நடிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி! எப்போது படப்பிடிப்பு துவங்கும் என ஆவலாக இருக்கிறேன்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;