கௌதம் மேனன் ஏன் நிவின் பாலி படத்தில் நடிக்கவில்லை?

கௌதம் மேனன் ஏன் நிவின் பாலி படத்தில் நடிக்கவில்லை?

செய்திகள் 15-Feb-2016 3:29 PM IST VRC கருத்துக்கள்

நிவின் பாலி நடித்து ஹிட்டான மலையாள படம் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’. இப்படத்தின் கதையை வினீத் சீனிவாசன் எழுதியிருந்தார். இந்த கதையில் நாயகனாக நடித்திருந்த நிவின் பாலி இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர விரும்புவது மாதிரி திரைக்கதை அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தை தொடர்ந்து நிவின் பாலியை வைத்து ‘ஜாக்கோபின்டெ சொர்க ராஜ்ஜியம்’ என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார் வினீத் சீனிவாசன. இந்த பட அறிவிப்பில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்று வினீத் சீனிவாசன தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுற்றது. ஆனால் இப்படத்தில் கௌதம் மேனன் நடிக்கவில்லை. இதில் கௌதம் மேனன் ஏன் நடிக்க முடியாமல் போனது என்பது குறித்து வினீத் சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

‘‘ஜாக்கோபிண்டெ சொர்க ராஜ்ஜியம்’ படத்தின் படபிடிப்பை துபாயில் நடத்துவதற்கு திட்டமிட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் கௌதம் மேனன சாரின் தேதிகளை பெற்றோம்! அவர் கொடுத்த தேதிகளில் தான் சென்னையில் பெரும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனால விமான நிலையம் மூடப்பட்டது. அதனால் எங்களால் அவரை துபாய்க்கு அழைத்து வரமுடியவில்லை. அவருக்காக அந்த படப்பிடிப்பினை தள்ளி வைப்பதற்கான சாத்தியமும் இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு கௌதம் சாரும் அவரது படத்தில் பிஸியாக இருந்தார். நாங்களும் எங்கள் பட வேலைகளில் பிசியாக இருந்தோம்! எனினும் கடவுள் அருளால் கௌதம் மேனன் சார் செய்யவிருந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தமான அறிமுக நடிகர் ஒருவர் எங்களுக்கு கிடைத்தார்! ஆனாலும் கௌதம் மேனன் சாருடன் பணியாற்ற கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பை இழந்ததில் எங்களுக்கெல்லாம் வருத்தம் தான்! ஆனால் அந்த வருத்தத்திலும் எங்களுக்கு மன நிறைவை தரும் விதமாக அந்த நடிகரின் பங்களிப்பு அமைந்தது. இதெல்லாம் நல்லதுக்காக நடந்தது என்று கூட இப்போது எங்களுக்கு தோன்றுகிறது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார் வினீத் சீனிவாசன்! இது கௌதம் மேனன் நடிக்கவிருந்த முதல் மலையாள படம் என்பது குறிப்பிடத்தகது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;