மாதவன், விஜய்சேதுபதி இணையும் படம்?

மாதவன், விஜய்சேதுபதி இணையும் படம்?

செய்திகள் 15-Feb-2016 2:20 PM IST VRC கருத்துக்கள்

‘இறுதிச்சுற்று’ படத்தை தொடர்ந்து மாதவன், புஷ்கர் - காயத்ரி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என்று பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் இப்படத்தை ‘இறுதிச்சுற்று’ படத்தை தயாரித்த ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இரண்டு கதாநாயகர்களை கொண்ட ரொமாண்டிக் த்ரில்லர் கதையாம் இப்படம்! இதில் இன்னொரு நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஓரம் போ’, ‘வா’ ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கும் மூன்றாவது படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;