கார்த்தியின் ‘தோழா’ ரிலீஸ் எப்போது?

கார்த்தியின் ‘தோழா’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 15-Feb-2016 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வந்த படம் ‘தோழா’. ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூர் நாட்கள்’ உட்பட பல படங்களை தயாரித்துள்ள ‘பிவிபி சினிமாஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் இன்னொரு கதாநாயகனாக நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், விவேக், சமீபத்தில் காலமான நடிகை கல்பனா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இணைபிரியாத நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். ‘பெங்ளூர் நாட்கள்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தர் இசை அமைக்கிறார். ‘தோழா’வை ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தினர் அடுத்த மாதம் (மார்ச்) இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;