இரண்டாம் பாகத்தை இயக்கும் மிஷ்கின்!

இரண்டாம் பாகத்தை இயக்கும் மிஷ்கின்!

செய்திகள் 15-Feb-2016 10:43 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது இப்போது ஒரு டிரெண்டாக இருந்து வருகிறது. இந்த லிஸ்டில் இயக்குனர் மிஷ்கினும் இணையவிருக்கிறார். தான் இயக்கிய, ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. நரேன், அஜ்மல், பிரசன்னா, விஜயலட்சுமி முதலானோர் நடித்து 2008-ல் வெளியான படம் ‘அஞ்சாதே’. இப்படம் வணிகரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சன ரீதியாகவும் நன்றாக பேசப்பட்டது. இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்திருந்தார். சுந்தர் சி.பாபு இசை அமைத்திருந்தார். ‘அஞ்சாதே-2’ படத்தையும் முதல் பாகத்தை தயரித்த நேமிசந்த் ஜபக்கே தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;