மெகா ஸ்டாருடன் இணையும் வரலட்சுமி!

மெகா ஸ்டாருடன் இணையும் வரலட்சுமி!

செய்திகள் 15-Feb-2016 10:21 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதோ இல்லையோ அப்படத்தில் கதையின் நாயகியாக நடித்த வரலட்சுமியின் பர்ஃபார்மென்ஸ் அனைவராலும் பேசப்பட்டது! அடுத்து வரலட்சுமி மலையாள படவுலகில் நுழையவிருக்கிறார். மலையாள சினிமாவின் மெகா ஸ்டாரான மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இது வரலட்சுமியின் முதல் மலையாள படம் என்பது குறிப்பிடத்தக்கது.அறிமுக இயக்குனர் நித்தின் ரஞ்சி பணிக்கர் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வரலட்சுமிக்கு மம்முட்டிக்கு இணையான கதாபாத்திரமாம்! நித்தின் ரஞ்சி பணிக்கர் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளரான ரஞ்சி பணிக்கரின் மகனாவார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள கோலாரில் விரைவில் துவங்கவிருக்கிறது. ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள சம்பத்தும் இப்படத்தில் முக்கிய ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியன் - டீசர்


;