இந்திய அளவில் அதிகம் வசூலித்த இந்தியப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ‘பாகுபலி’ திரைப்படம், இந்தியா மட்டுமின்றி உலகளவில் லதீதீன் அமெரிக்கா, ஜப்பான் உட்பட 30 நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ‘பாகுபலி’யை ஜெர்மனியில் வெளியிடுவதற்கும் நல்ல விலை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல் சீனாவில் வெளியான படங்களிலேயே அதிக பிரிண்ட் போடப்பட்ட படம் என்ற சாதனையை அமீர்கான் வைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி முறியடித்திருக்கிறார்.
ஆம்... அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் மே மாதம் சீனாவில் வெளியான ‘பிகே’ ஹிந்தி படத்திற்கு 4500க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டதாம். அந்த சாதனையை முறியடித்து தற்போது ‘பாகுபலி’ படத்திற்காக 6000க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டிருக்கிறதாம். இந்தியப்படங்களைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனை. வரும் மே மாதம் ‘பாகுபலி’ திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...
உலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில்...