‘கதகளி’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘மருது’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். ஒருபுறம் நடிகர் சங்க வேலைகள், இன்னொருபுறம் படப்பிடிப்பு வேலைகள் என பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கும் விஷாலுக்கு சர்ப்ரைஸ் செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து, நீண்டநாட்களாக ரிலீஸாகமல் இருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தை வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் ரிலீஸ் சிற்சில நிதிப் பிரச்சனைகளால் நீண்டநாட்களாக தள்ளிக்கொண்டே இருந்தது. இந்நிலையில், சுந்தர்.சி.யின் அரண்மனை, அரண்மனை 2 படங்கள் வரிசையாக ஹிட்டாகியிருப்பதால், இந்த நேரத்தில் ‘மத கஜ ராஜா’வை வெளியிடும் பட்சத்தில் நல்ல ஓபனிங் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு படத்தை வாங்கி வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் விநியோகஸ்தர்களை வரவழைத்து, அவர்களுக்காக பிரத்யேகமாக ‘மத கஜ ராஜா’வை திரையிட்டுக் காண்பிக்க இருக்கிறார்களாம். இந்த திரையிடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கூடிப்பேசி, மார்ச் 11ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருப்பதாகவும் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...