சிம்பு + ஜீ.வி + ஆதிக் ரவிச்சந்திரன் : சர்ப்ரைஸ் கூட்டணி!

சிம்பு + ஜீ.வி + ஆதிக் ரவிச்சந்திரன் : சர்ப்ரைஸ் கூட்டணி!

செய்திகள் 13-Feb-2016 10:05 AM IST Chandru கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படம் மூலம் ‘யூத்’களின் பல்ஸை பலமாக பிடித்துக்கொண்டார். ‘ஏ’டாகூடமான அப்படத்திற்குப் பிறகு, சிம்புவை நாயகனாக வைத்து புதிய படமொன்றை ஆதிக் இயக்குகிறார் என செய்திகள் வெளிவந்தன. பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவது சிம்பு இல்லை, மீண்டும் ஜீ.வி.யே நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் மூன்று பேருமே இணைந்துதான் படம் செய்யவிருக்கிறார்களாம்.

ஆம்... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறாராம். இப்படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிந்திரன் இயக்கத்தில் 3வதாக உருவாகவிருக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு செய்திகளுமே, மீடியாக்களில் வேறு வேறு வடிவில் வெளிவந்ததால்தான் இந்த குழப்பமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;