நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் என வரிசையாக தனது படங்களில் வெரைட்டி காட்டி வரும் விஜய் ஆண்டனி தற்போது நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன்’. ஐந்து ஐந்து ஐந்து படத்திற்குப் பிறகு இயக்குனர் சசி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நாயகன் விஜய் ஆண்டனியே இசையமைக்கும் பணியையும் கவனித்திருக்கிறார். அதோடு இப்படத்திற்கு தயாரிப்பாளரும் அவரே. இப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் சென்சாரில் யு சான்றிதழ் வாங்கியிருக்கிறது.
ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் குறைந்தது 3 படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தனது ‘பிச்சைக்காரன்’ படத்தை மார்ச் முதல் வார வெள்ளிக்கிழமையான 4ஆம் தேதி களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....