ரிவைசிங் கமிட்டியில் ‘மிருதனு’க்கு கிடைத்த ரிசல்ட்!

ரிவைசிங் கமிட்டியில் ‘மிருதனு’க்கு கிடைத்த ரிசல்ட்!

செய்திகள் 12-Feb-2016 10:46 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படமான ‘மிருதனு’க்கு சென்சாரில் எந்தக் கட்டும் இல்லாமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகப்படியான கோரக் காட்சிகளால் இந்த ரிசல்ட் கிடைத்ததாகக் கூறப்பட்டது. இருந்தபோதிலும், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப தயாரிப்பாளரும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் முடிவு செய்திருந்தார்கள். திட்டமிட்டபடி, ரிவைசிங் கமிட்டிலும் ‘மிருதன்’ படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள் சிற்சில மாறுதல்களை மட்டும் கூறிவிட்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம். இதனால் இப்படத்தை பெற்றோருடன் அமர்ந்து குழந்தைகளும் பார்க்கலாம்.

ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருக்கிறார். இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘மிருதன்’ வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;