மலேசியா டூ சென்னை – ‘இரு முகன்’ ப்ளான்!

மலேசியா டூ சென்னை – ‘இரு முகன்’ ப்ளான்!

செய்திகள் 11-Feb-2016 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இருமுகன்’. மலேசியாவில் நடந்து வந்த இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் ‘இருமுகனி’ன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். நாளை (12-2-16) அல்லது நாளை மறுநாள் ‘இரு முகனி’ன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்த ஷெட்யூல் படப்பிடிபு தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெறுமாம். இப்படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, இன்னொரு நாயகியாக நித்யா மேனனும் நடிக்கிறார். விஜய் நடித்த ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இருமுகனை ‘அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;