‘சவுகார்பேட்டை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சவுகார்பேட்டை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 11-Feb-2016 11:06 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ போன்ற படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, நாயகியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் சரவணன், சுமன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், ‘தலைவாசல்’ விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன்,டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி என ஏராளமானோர் நடித்துள்ளனர். வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து இதே நிறுனத்திற்காக வடிவுடையான் இயக்கும் இரண்டாவது படம் ‘பொட்டு’. பரத், நமீதா, இனியா முதலானோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ‘பொட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இதே நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வடிவுடையான். இப்படத்தில் ‘சவுகார்பேட்டை’ கதாநாயகனான ஸ்ரீகாந்தே ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒரு படம் ரிலீசாகிறதுக்கு முன்னாடியே அதே நிறுவனத்திற்கு அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயம். அந்த வாய்ப்பு வடிவுடையானுக்கு கிடைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;