‘U/A’க்கு நன்றி சொன்ன சித்தார்த் !

‘U/A’க்கு நன்றி சொன்ன சித்தார்த் !

செய்திகள் 11-Feb-2016 10:55 AM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் சித்தார்த் தனது ‘எடாகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் முதன் முதலாக தயாரித்துள்ள படம் ‘ஜில் ஜங் ஜக்’. நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் தீரஜ் வைத்தி எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சித்தார்த்துடன் ராதாரவி, அவினாஷ், ரகுதேவன், சனந்த், ஆர்.மகேந்திரன், எம்.ஜி.சாய் தீனா, கே.பகவதி பெருமாள், நாகா, பிபின், ஷரத், ஆர்.எஸ்.சிவாஜி, விஜய்முத்து, பிரவீன், ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் நடித்துள்ளனர். ‘கதாநாயகி இல்லாமல் மூன்று இளைஞர்களை சுற்றிச் சுழலும் வித்தியாசமான ஒரு கதை அமைப்பைக் கொண்ட இப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ‘ஜில் ஜங் ஜக்’கிற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் வழங்கியிருக்கிறார்கள். இதனை வரவேற்று சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதில் ‘‘ரொம்ப சந்தோஷம், சுத்தமான, அமைதியான, தெய்வீகமான ‘U/A’ கிடைத்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - லொக்காலிட்டி பாடல் மேக்கிங்


;