ஹிந்திக்கு போகும் விசாரணை!

ஹிந்திக்கு போகும் விசாரணை!

செய்திகள் 10-Feb-2016 3:59 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'விசாரணை'. ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன! அத்துடன் இப்படம் தற்போது ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீ-மேக் உரிமையை பிரபல இயக்குனர் ப்ரியதர்சன் வாங்கியுள்ளார் என்ற தவகல் வெளியாகியுள்ளது. இப்படத்தை விரைவில் ஹிந்தியில் ப்ரியதர்சன் இயக்கவிருக்கிறார் என்றும் அதில் அக்‌ஷய் குமார் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார் தற்போது ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஹிந்தி திரையுகில் பிரபலமானவரான அனுராக் காஷ்யாப் 2015-ஆம் ஆண்டின் தனக்கு பிடித்த 10 இந்திய படங்களில் ‘விசாரணை’ முதல் இடத்தில் இருப்பதாக கூறி, வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;