எஸ்.ஏ.சி., டி.ஆர். வெளியிட்ட ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’

எஸ்.ஏ.சி., டி.ஆர். வெளியிட்ட ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’

செய்திகள் 10-Feb-2016 12:47 PM IST VRC கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘போக்கிரி ராஜா’. ஜீவாவின் 25ஆவது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். வில்லனாக சிபிராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’ என்று துவங்கும் சிங்கிள் டிராக் ஒன்றை நேற்று மாலை வெளிளியிட்டார்கள். இந்த பாடலை டி.இமான் இசையில் அவரே பாடியுள்ளார். இது சம்பந்தமாக நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த பாடலை வெளியிட்டார்கள்! இவர்களுடன் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ், டி.இமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

‘போக்கிரி ராஜா’வின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டதை தொடர்ந்து இப்படத்தின் அனைத்து பாடல்களின் வெளியீட்டு விழா காதலர் தினமான ஃபிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பி.டிஎஸ். ஃபிலிம் இன்டர்நேஷன்ல் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘நாய்கள் ஜாக்கிரதை’, ரோமியோ ஜூலியட்’ முதலான படங்களை தமிழகம் முழுக்க வெளியிட்ட ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவக்குமார் கைபற்றியுள்ளார். இது ஜீவா நடிக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;