‘தெறி’யை முந்தும் ‘முடிஞ்சா இவனப் புடி’

‘தெறி’யை முந்தும்  ‘முடிஞ்சா இவனப் புடி’

செய்திகள் 10-Feb-2016 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் படம் ‘முடிஞ்சா இவனப் புடி’. சுதீப் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷும், எம்.பி.பாபு இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் ‘தெறி’க்கு முன்பாக ‘முடிஞ்சா இவனைப் புடி’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதால் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை மிக விரைவில் வெளியிடவிருக்கிறார்கள் ‘லிங்கா’வை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படம், முதன் முதலாக கே.எஸ்.ரவிகுமாரும், சுதீபும் இணைந்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;