மார்ச் முதல் வெற்றிமாறன், கௌதமுடன் இணையும் தனுஷ்!

மார்ச் முதல் வெற்றிமாறன், கௌதமுடன் இணையும் தனுஷ்!

செய்திகள் 10-Feb-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிரட்டு’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு, தற்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். லேட்டஸ்ட் தகவலின்படி ஷாம்லிக்குப் பதில், இன்னொரு நாயகியாக ‘பிரேமம்’ மடோனா செபாஸ்டியன் நடிப்பார் எனத் தெரிகிறது.

இது ஒரு புறமிருக்க, நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்மேல் பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பும் இதே மார்ச் மாதம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரூபாய் - டிரைலர்


;