பாபி சிம்ஹாவின் 14 கெட்அப்கள்!

பாபி சிம்ஹாவின் 14 கெட்அப்கள்!

செய்திகள் 10-Feb-2016 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்ற நடிகர் பாபி சிம்ஹா அடுத்தடுத்து தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று வருகிறார். தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில்கூட அப்பாவி நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘இறைவி’ படத்திலும் பாபி சிம்ஹாவுக்கு சூப்பரான கேரக்டராம்.

இதெல்லாம் போதாதென்று விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகிவரும் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் 14 வித்தியாசமான கெட்அப்களில் நடித்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. இப்படத்தில் நடிகர் கருணாகரனுக்கும் மொத்தம் 11 கெட்அப்களாம். 2 பாடல்களைத்தவிர இப்படத்தின் மற்ற படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.

தற்போது ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து வருகிறார் பாபி சிம்ஹா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;