விஜய்க்கு ஜோடி : கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்!

விஜய்க்கு ஜோடி : கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்!

செய்திகள் 10-Feb-2016 9:56 AM IST Chandru கருத்துக்கள்

மலையாளத்திலிருந்து தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகளின் பட்டியலில் வெகு சீக்கிரமாக இடம்பிடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதனைத் தொடர்ந்து ‘ரஜினி முருகன்’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்தார். விக்ரம் பிரபு, சிவாவைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ‘மிரட்டு’ படத்திலும் நடித்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதோடு சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி. இதுதவிர பாபி சிம்ஹாவோடு ‘பாம்புச் சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.

மளமளவென வாய்ப்புகளைக் கைப்பற்றி வரும் கீர்த்திக்கு தற்போது விஜய்யுடன் நடிக்கும் ‘ஜாக்பாட் வாய்ப்பு’ அமைந்திருக்கிறது. பரதன் இயக்கவிருக்கும் ‘விஜய் 60’ படத்தில் ‘இளையதளபதி’க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறதாம். முதலில் இப்படத்தின் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலின் பெயர் பரிசீலனையில் இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கீர்த்தி வசம் வந்திருக்கிறது. இதனால் முன்னணி நாயகர்களின் படங்களின் ஃபேவரைட் நாயகியாக உருவெடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;