‘‘நான் இயக்குனர்களின் நடிகன்!’’ - ‘குத்தூசி’ திலீபன்!

‘‘நான் இயக்குனர்களின் நடிகன்!’’ - ‘குத்தூசி’ திலீபன்!

கட்டுரை 9-Feb-2016 3:50 PM IST Chandru கருத்துக்கள்

‘வத்திக்குச்சி’ மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் திலீபன். ‘இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்’ என்ற விசிட்டிங் கார்டுடன் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்திருந்தாலும், தனக்கான தனித்திறமைகள் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார். ‘வத்திக்குச்சி’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘குத்தூசி’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் திலீபன்.

இயக்குனர் சீனுராமசாமியிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த சிவசக்தி என்பவர் இந்த ‘குத்தூசி’ மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் திலீபனுக்கு ஜோடியாக புதுமுகம் அமலா நடித்திருக்கிறார். இவர்களுடன் வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இத்தாலி நடிகர் ஒருவரை களமிறக்கியிருக்கிறார்கள். ‘ஆடுகளம்’ ஜெயபாலனும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். நீரவ் ஷாவிடம் அசோசியேட்டாகப் பணிபுரிந்த பாகி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘தமிழ்ப்படம்’ கண்ணன் இசையமைத்திருக்கிறார். ‘வத்திக்குச்சி’ படத்தைத் தொடர்ந்து, திலீபன் நடிக்கும் இப்படத்திற்கும் சண்டை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார் ராஜசேகர். வசனம் வீரு சரண்.

விவசாயம் குறித்து பேசும் படங்கள் தமிழில் அரிதாகவே வெளிவருகின்றன. அந்த அரிதான பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்த ‘குத்தூசி’யும் விவசாயத்தின் அவசியம் பற்றியும், விளைநிலங்களின் தேவை குறித்தும் ‘ஷார்ப்’பான கருத்துக்களை பேசவிருக்கிறதாம். ‘முப்பாட்டன்களிடமிருந்து பாட்டன்களுக்கும், பாட்டன்களிடமிருந்து தாத்தாக்களுக்கும், தாத்தாகளிடமிருந்து அப்பாக்களுக்கும் கத்துக் கொடுப்பட்ட விவசாயம் இன்று கவனிக்க ஆளின்றி அநாதையாக நிற்கிறது. விவசாயம் செய்ய ஆளும் இல்லை, நிலமும் இல்லை’ என்பன போன்ற கருத்துக்களை பதிவு செய்யும் எமோஷனல் ஆக்ஷன் படமாக ‘குத்தூசி’ உருவாகியிருக்கிறதாம். கருத்துக்கள் சொல்லும் படமாக இது இருந்தாலும், ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான பாடல், சண்டைக்காட்சி, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த என்டர்டெயின்மென்ட் மூவியாகவே இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்து படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள்.

இப்படம் குறித்து நாயகன் திலீபனுடன் பேசியபோது, ‘‘வத்திக்குச்சி மூலம் எனக்கான அடையாளத்தை தமிழ்சினிமாவில் பெற்றேன். இப்போது இந்த ‘குத்தூசி’ மூலம் எனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் காத்திருக்கிறேன். எனது முதல் படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக என்னை அடையாளம் கண்ட ரசிகர்கள், இப்படத்தில் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக என்னை அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ‘வத்திக்குச்சி’யைப் போலவே இந்த ‘குத்தூசி’யிலும் 3 வித்தியாசமான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கமர்ஷியல் விஷயங்கள் அனைத்தும் கலந்த இந்த ‘குத்தூசி’, ஆங்காங்கே விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ரசிகர்கள் மனதில் விதைக்கும்! என் முதல் இரண்டு படங்களுமே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ளதாக அமைந்திருந்தாலும், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே என்னை நான் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான நல்ல கதைகளில், இயக்குனருக்கான நாயகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!’’ என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குத்தூசி - ட்ரைலர்


;