‘யு’ வாங்கிய பிச்சைக்காரன்!

‘யு’ வாங்கிய பிச்சைக்காரன்!

செய்திகள் 9-Feb-2016 3:19 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி தனது ‘விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் இசை அமைத்து, கதாநாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படம் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘பிச்சைகார’னுக்கு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே ‘பிச்சைக்கர’னுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் ‘பிச்சைக்காரன்’ குழுவினர்! ‘இந்திய பாகிஸ்தான்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்துள்ள இப்படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;