நடிகர் சங்க இடத்தை மீட்டெடுத்த புதிய நிர்வாகிகள்!

நடிகர் சங்க இடத்தை மீட்டெடுத்த புதிய நிர்வாகிகள்!

செய்திகள் 9-Feb-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அப்போதைய சங்க நிர்வாகிகள், எஸ்.பி.ஐ.சினிமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை விதிகளின் படி தவறானது என சங்க உறுப்பினர் பூச்சி முருகன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்துடன் நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தபோது ‘பாண்டவர் அணி’ என்ற பெயரில் போட்டியிட்டவர்கள் தேர்தலில் நாங்கள் வெற்றிப் பெற்றால் எஸ்.பி.ஐ.சினிமாசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி எடுப்போம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.. அதன் படி சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியினர் வெற்றியும் பெற்றனர், அவர்கள் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டிருந்த படி எஸ்.பி.ஐ.சினிமாஸுடனான ஒப்பந்தத்தை சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ரத்தும் செய்துள்ளனர். இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்திருப்பதால் சங்க உறுப்பினரான பூச்சி முருகன் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறவும் இருக்கிறார்.

இந்த தகவல்களை நேற்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் தெரிவித்தனர். அத்துடன் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான அந்த இடத்தில் விரைவில் மிகப் பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தை கட்டவும் முடிவு செய்திருப்பதோடு அதன் அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனைத்து சங்க உறுப்பினர்களை அழக்கவிருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;