கௌதம் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

கௌதம் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

செய்திகள் 9-Feb-2016 10:29 AM IST Chandru கருத்துக்கள்

சில நாட்களுக்கு முன்பே, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கௌதம் மேனன் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ஒரு படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தோம். தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இன்னொரு படத்திற்கான ஹீரோவும் யார் எனத் தெரிந்துவிட்டது. அவர் வேறு யாருமல்ல, நம்ம தனுஷ்தான்! கௌதமுடன் முதல்முறையாக தனுஷ் இணையவிருக்கும் இப்படத்திற்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்ற தலைப்பை வைக்க பரிசீலனை நடந்து வருகிறதாம். ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து கௌதமின் இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறாராம். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;