நயன்தாரா பட புதிய தகவல்கள்!

நயன்தாரா பட புதிய தகவல்கள்!

செய்திகள் 9-Feb-2016 10:26 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சற்குணம், நயன்தாராவை கதையின் நாயகியாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர். சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்தை சற்குணத்துடன் இணைந்து நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாராவுடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைக்கிறார்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்ப்திவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;