‘பாகுபலி 2’வில் ‘கோலி சோடா’ வில்லன் மதுசூதன்!

‘பாகுபலி 2’வில் ‘கோலி சோடா’ வில்லன் மதுசூதன்!

செய்திகள் 9-Feb-2016 10:13 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கோலி சோடா’வில் வில்லனாக அறிமுகமானவர் மதுசூதன் ராவ். இப்படத்தைத் தொடர்ந்து ஜீவா, வன்மம், மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன், கதகளி ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வில்லனாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது ‘ஜாக்பாட் வாய்ப்பு’ ஒன்று மதுசூதனுக்கு வந்திருக்கிறது. ஆம்... இந்தியாவின் பிரம்மாண்ட படங்களில் ஒன்றான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மதுசூதனுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படத்தில் போர்க்காட்சிகள் உட்பட ஆறேழு காட்சிகளில் மதுசூதன் தோன்றுவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;