ஹாலிவுட் படத்தில் நாசர்!

ஹாலிவுட் படத்தில் நாசர்!

செய்திகள் 8-Feb-2016 3:09 PM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு கேரக்டர்களில் நடித்தவர் நாசர். ஏற்கெனவே ‘நத்திங் பட் லைஃப்’, ‘மார்னிங் ராகா’ ஆகிய ஆங்கில படங்களிலும், ‘பேர் ஹேம்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ள நாசர் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘சோலார் எக்ளிப்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இயக்குனர் பங்கஜ் சேகல் இயக்குகிறார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ள கதையில் நாசர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். நாசர் நடிக்கும் இரண்டாவது ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வேறு சில இந்திய நடிகர்களும் நடிக்கவிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;