கார்த்திக் வாரிசுக்கு கமல் வாய்ஸ்!

கார்த்திக் வாரிசுக்கு கமல் வாய்ஸ்!

செய்திகள் 8-Feb-2016 10:51 AM IST VRC கருத்துக்கள்

முதன் முறையாக கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’. ‘குளோபல் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக, இசைஞானி இளையராஜா இசையில் "தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா…" என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். கௌதம் கார்த்திக்கும் பிரியா ஆனந்தும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம் புலி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - டீசர்


;