மீண்டும் யானையுடன் வருகிறார் பிரபு சாலமன்!

மீண்டும் யானையுடன் வருகிறார் பிரபு சாலமன்!

செய்திகள் 8-Feb-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கி கடந்த 2012-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட ‘கும்கி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க இப்போது முடிவு செய்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள், தயாரிப்பு நிறுவனம் முதலான விஷயங்களை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘மிரட்டு’ படத்தின் போஸ்ட புரொடக்‌ஷன் வேலைகளில் தற்போது பிசியாக இருக்கும் பிரபு சாலமன் இப்படம் வெளியானதும் ‘கும்கி-2’வின் வேலைகளை துவங்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;