3 வார இடைவெளியில் விஜய்சேதுபதியின் 2 படங்கள்?

3 வார இடைவெளியில் விஜய்சேதுபதியின் 2 படங்கள்?

செய்திகள் 8-Feb-2016 10:23 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்பார்த்ததைப் போலவே, ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதற்கான திட்டமிடல்கள் ஆரம்பத்தில் நடந்து வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் விஜய்சேதுபதியின் இன்னொரு படமான ‘சேதுபதி’ வரும் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதும், ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் ரிலீஸை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருக்கும் ‘காதலும் கடந்து போகும்’ படத்தை மார்ச் 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். கொரியன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தை ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

வரும் 19ஆம் தேதி வெளியாகும் ‘சேதுபதி’ படத்தைத் தொடர்ந்து, அடுத்த 3 வாரத்திலேயே விஜய்சேதுபதியின் இன்னொரு படமான ‘காதலும் கடந்து போகும்’ படமும் வெளியாகவிருப்பது அவர் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;