விஜய்யின் ‘தெறி’ டீஸர் செய்திருக்கும் 10 சாதனைகள்!

விஜய்யின் ‘தெறி’ டீஸர் செய்திருக்கும் 10 சாதனைகள்!

செய்திகள் 8-Feb-2016 9:52 AM IST Chandru கருத்துக்கள்

இத்தனை பெரிய வரவேற்பை நிச்சயம் விஜய், அட்லி, தாணு உள்ளிட்ட ‘தெறி’ டீமே எதிர்பார்த்திருக்காது. 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து சாதனை செய்த ‘தெறி’ மேலும் பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த சாதனைத் துளிகளின் விவரம்

1. 6 மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸ்.
2. 12 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையிடல்கள்
3. 22 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையிடல்கள்
4. 29 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையிடல்கள்
5. 50 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்ஸ்.
6. 52 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையிடல்கள்
7. 82 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையிடல்கள்
8. இந்த டீஸர் குறித்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமென்ட்கள் யு டியூப்பில் பதிவாகியிருப்பதுகூட ஒரு புதிய சாதனைதான்.
9. அதேபோல் வெறும் 2 ஆயிரம் சந்தாதாரர்களை மட்டுமே கொண்டிருந்த கலைப்புலி எஸ்.தாணுவின் யு டியூப் சேனலுக்கு, இந்த ‘தெறி’ டீஸர் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட 50 ஆயிரம் சந்தாதாரர்கள் புதிதாக கிடைத்திருக்கிறார்கள்.
10. ‘தெறி’ டீஸர் வெளியான நாள்முதல் இன்றுவரை யு டியூப் இணையதளத்தின் முதன்மைப் பக்கத்தில் தொடர்ச்சியாக முதலிடத்திலிருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;