யுவன் தரும் காதலர் தின ட்ரீட்!

யுவன் தரும் காதலர் தின ட்ரீட்!

செய்திகள் 6-Feb-2016 4:47 PM IST VRC கருத்துக்கள்

‘யட்சன்’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘யாக்கை’. அறிமுக இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கும் இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி ரெட்டி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதலில் ‘இதயம்’ என்று பெயர் சூட்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த படம் தான் இப்போது ‘யாக்கை’ என்ற பெயர் மாற்றத்துடன் உருவாகி வருகிறது. யுவன் இசை அமைப்பில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களில் ஒன்றை வருகிற 13 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஃபிப்ரவரி-14 காதலர் தினம் என்பதால் அதற்கு ஒரு நாள் முன்னதாக ‘யாக்கை’ பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக வழங்கவிருக்கிறார் யுவன் மற்றும் ‘யாக்கை’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;