கார்த்தி, பாலாவை தொடர்ந்து ஷங்கர்!

கார்த்தி, பாலாவை தொடர்ந்து ஷங்கர்!

செய்திகள் 6-Feb-2016 3:19 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருப்பதோடு பல திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தான் இறுதிச்சுற்று படத்தை பார்க்க ஆவலாய் இருப்பதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். நடிகர் கார்த்தி, இயக்குனர் பாலா முதலானோரும் ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்திருந்தனர். இப்போது இயக்குனர் ஷங்கரும் இறுதிச்சுற்று படத்தை பார்த்து, தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். அதில் ‘‘இறுதிச்சுற்று பெண்களுக்கு மரியாதை தரும் படம்! இயக்குநர் சுதா சிறப்பான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். ரித்திகா, மாதவன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையை தந்துள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஷங்கரின் பாராட்டால் மேலும் சந்தோஷமடைந்துள்ளனர் ‘இறுதிச்சுற்று’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;