காதலர் தினத்தில் ஜீவா, சிபிராஜுடன் கை கோர்க்கும் காஜல் அகர்வால்!

காதலர் தினத்தில் ஜீவா, சிபிராஜுடன் கை கோர்க்கும் காஜல் அகர்வால்!

செய்திகள் 6-Feb-2016 12:15 PM IST VRC கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் ‘போக்கிரி ராஜா’. ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவ்விழாவில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோருடன் நடிகை காஜல் அகர்வால் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;