ஒட்டுமொத்த சாதனைகளையும் குத்தகைக்கு எடுத்த ‘தெறி’ டீஸர்!

ஒட்டுமொத்த சாதனைகளையும் குத்தகைக்கு எடுத்த ‘தெறி’ டீஸர்!

செய்திகள் 6-Feb-2016 9:57 AM IST Chandru கருத்துக்கள்

இதற்காகத்தான்... இப்படி ஒரு டீஸருக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார்கள் விஜய் ரசிகர்கள். அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் 50 வினாடி டீஸரில் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர் அட்லி. 4 விதமான தோற்றங்கள், ஸ்டைலிஷ், மாஸ், கிளாஸ் என விஜய்யை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது ‘தெறி’. விஜய்யின் ஒவ்வொரு பட டீஸர், டிரைலர் வெளியாகும்போதும் ஏதாவது ஒரு புதிய சாதனையைப் படைக்கும். அதை அஜித் பட டீஸர்/டிரைலர் முறியடிக்கும். பின்னர் விஜய் படம் மீண்டும் இதனை முறியடிக்கும். இது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் ‘புலி’ டீஸர் படைத்த சாதனைகள் அனைத்தையும் ‘வேதாளம்’ டீஸர் முறியடித்தது. இப்போது ‘வேதாளம்’ உட்பட தென்னிந்தியா சினிமா டீஸர்/டிரைலர்கள் படைத்த சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளது ‘தெறி’ டீஸர். அதன் விவரங்கள்...

1. குறைந்த மணி நேரத்தில் (12 மணி நேரம்) 10 லட்சம் பார்வையிடல்களைப் பெற்ற முதல் தென்னிந்திய டீஸர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘தெறி’ டீஸர். (‘ஐ’ டீஸர், ‘தெறி’க்கு அடுத்தபடியாக விரைவாக 10 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது)

2. அதேபோல் முதல் நாளில் அதிகபட்ச பார்வையிடல்களையும் (22 லட்சம்), லைக்குகளையும் (1 லட்சத்தி 50 ஆயிரத்திற்கு மேல்) பெற்ற முதல் தென்னிந்திய டீஸர் என்ற சாதனையையும் ‘தெறி’ டீஸர் வசம் வந்திருக்கிறது. (‘ஐ’ டீஸர் முதல் நாளில் 15 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றது)

3. முதல் 30 மணி நேரத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களையும், 1,75000த்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் வாங்கிய முதல் தென்னிந்திய டீஸர் ‘தெறி’தான். (‘ஐ’ டீஸர் முதல் 45 மணி நேரத்தில் இந்த சாதனையைப் படைத்தது)

4. இந்திய அளவில் அதிக ‘லைக்’குகளை வாங்கிய டீஸர் என்ற சாதனை ‘வேதாளம்’ டீஸர் (1 லட்சத்து 41 ஆயிரம்) இருந்தது. அதனையும் தட்டிப் பறித்திருக்கிறது ‘தெறி’ டீஸர். இந்த டீஸர் 34 மணி நேரத்தில் ஒரு லட்சத்தி 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இதுஒரு மிகப்பெரிய சாதனை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;