‘நாடோடிகள்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரிலும், ‘தரணி’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்த அஜய்கிருஷ்ணா அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘கட்டம் போட்ட சட்டை’. ஒயிட் பீக்காக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கும் இப்படத்தை அகத்தியனிடம் உதவியாளராக இருந்த அக்ஷயபிரியன் இயக்குகிறார். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரயாகா அஜய் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். தென்மாவட்ட பின்னணியில் சொல்லப்படும் கிராமத்து கதையாம் ‘கட்டம் போட்ட சட்டை’. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
‘கென்னடி கிளப்’ படத்தை தொடர்ந்து சசிக்குமார், நேமிசந்த் ஜபக் தயாரிக்க ஒரு படத்தில் நடித்து...
சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்த சசிக்குமார் இப்போது ‘கொம்பு வச்ச சிங்கமடா’,...
அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் படம் ‘மாயநதி’. இந்த படத்தில் ‘பட்டதாரி’, ‘கேரள...